
க.மு-க்கும், க.பி-க்கும், ஆறு வித்தியாசம் இல்ல, எட்டு வித்தியாசம் இல்லீங்க, எல்லாமே வித்தியாசம்தான்….ஒரு இரண்டு மாசம், நல்லா ஊரை சுத்திக்கிட்டு, தேன் நிலவு போயிட்டு வந்துட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வருவாங்க. இங்கதான் நம்ம கதை ஆரம்பிக்குது!! கல்யாணத்துக்கப்பறம் தான், நம்ம ம.பி ஆபீஸ்-ல ரொம்ப பொறுப்பான ஆசாமியா மாறிடுவாரு.
எல்லா வேலையும் நிஜமாகவே இழுத்து போட்டுட்டு செய்றதென்ன, ஒரு மணி நேரம் கூட இ-மெயில் பார்க்காம வேலை செய்றதென்ன, ஆஹா ஆஹா……நீங்க வேறெங்க, எங்க வீட்டுக்குப் போனா, பொண்ணு பண்ற டார்ச்சர் அதிகமாகிடுமோன்னு ஒரு பயத்துலதான் ம.பி ஆபீஸ்-லயே தவமா இருப்பாரு!! தினமும் நைட் லேட்-ஆக வருவாரு…ஏன்னு கேட்டா ஒரு சிரிப்புதான் வரும்…(சீக்கிரம் வந்தா மட்டும் என்ன செய்யப் போறியாம்? )
நம்ம பொண்ணு ஆர்வக் கோளாறுல ம.பி-க்கு phone-ல பேசுதுன்னு வைங்க…dialogue-கை கவனிங்க மக்களே…
(call ringing…)
ம.பி: (பொண்ணு கால் பண்ணுதுன்னு தெரிஞ்சு டென்சன் ஆகி..) இப்பதான் ஒரு மீட்டிங் ஆரம்பிச்சிருக்காங்கடா….5 நிமிஷத்துல கூப்பிடறேன்….
பதில் கூட எதிர்பார்க்காம கால் கட் பண்ணிடுவாரு நம்ம ம.பி.
(எந்த ஆபீஸ்ல 5 நிமிஷ மீட்டிங் வைக்கிறாங்கன்னு தெரியலை)
அரை மணி நேரம் கழிச்சி, எப்படியோ ஞாபகம் வந்து call பண்ணுவாரு நம்ம ஆளு,,,,
ம.பி: வேலை எல்லாம் முடிஞ்சிதா?
ம.மு: உங்களுக்காகத்தான் waiting. வெளியில கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு?
ம.பி: (அதே dialogue தான்! ஆனா இப்போ சொல்றதுதான் உண்மை!) ஒரே tension office-ல….மூணு project handle பண்றேனா, எல்ல updates-ம் நானே குடுக்க வேண்டியதா இருக்கு…என்ன பன்றது…ஒரு 1 hour late ஆகும்டா செல்லம்!
ம.மு: உங்களுக்கு இதே வேலையா போச்சு! (party tension ஆகிடும்!) சரி சீக்கிரம் வந்து சேருங்க, wait பண்றேன்!
அவ்வளவுதான் பேச்சு….note பண்ணுங்க, க.மு-ல ஒரு மணி நேரம் கதைச்சது போக, க.பி-ல இரண்டு நிமிஷம் கூட தாண்டாது….ம.பி-யும் சாப்பிட்டியான்னு கேக்க மாட்டாங்க, ம.மு-வும் என்ன செய்யலாம்னு கேக்க மாட்டாங்க. ம.பி அவசர அவசரமா, ஒரு வழியா எல்லா வேலையும் முடிச்சிட்டு பசியோட கிளம்பி வந்தா, ஆறிப்போன தயிர் சாதம் காத்துக்கிட்டு இருக்கும்.
தொட்டுக்க ஊறுகாய் தான் எப்பவும். அதுவும், கல்யாணம் ஆன புதுசுல, அம்மா போட்டு குடுத்ததா இருக்கும். இப்படியே வாழ்க்கை போகும். க.மு-ல friend birthday-னா கூட ஞாபகம் வச்சு வாழ்த்து சொல்ற ஆளுங்க, க.பி-ல எதுவுமே ஞாபகம் வச்சிக்க மாட்டாங்க.
குறிப்பா, பசங்க இருக்காங்களே, அப்பப்பா, எப்படிப்பா இப்படி type type-ஆ முழிய மாத்தறீங்க; மறக்கறதையும் மறந்துட்டும் நயா பைசாக்கு பிரயோஜனம் இல்லாம முழிப்பாங்க பாருங்க, என்னத்த சொல்றது!! (உனக்கேன் இவ்வளவு அக்கறை-னு பராசக்தி வசனமா கேக்காதிங்க!! அப்பறம் நானும் பதில் சொல்லுவேன் ” நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்” அப்படின்னு சொல்லிடுவேன்! நானும் எவ்வளவு நேரம்தான் என் life பத்தி எழுதாம இருக்கறது!)
சரி எதோ மறந்துட்டோமே, அப்படின்னு நினைச்சு, மறுநாள் கடைக்குப் போய், (கடை கடையா ஏரி இறங்கெல்லாம் மாட்டாங்க, கண்ணுல முதல்ல எந்த கடை தெண்படுதோ, அதுல நுழைஞ்சிடுவாங்க!) பழைய மாதிரியே, ஒரு crystal பொம்மை, teddy bear, key chain, saree, அப்படின்னு ஏதாவது வாங்குவாங்க… (note the point: க.பி-ல diamond pendant வரும், platinum மோதரம் வரும்னு கனவெல்லாம் காணாதீங்க, அது ஒரு கனா காலம் ஆகிடும்….கண்டிப்பா அது வராது!) Gift வாங்கிட்டு office bag-லயே வச்சிடுவாங்க.
Evening வீட்டுக்கு வந்ததும் ஏதோ பேசும்போதுதான், gift ஞாபகம் வரும்…(note the point: க.மு-ல chik and neat-ஆ dress பண்ணி டைம் பார்த்து குடுத்தது எல்லாம் நினைவில் கொள்க!) Gift-i எடுத்துட்டு வந்து ஒரு சின்ன சிரிப்போட குடுத்திடுவாங்க. நம்ம பொண்ணு என்ன செய்யும், ஆசை ஆசையா gift பிரிச்சுப் பார்க்கும்…பார்த்ததும், first ஒரு ஏமாற்றமான கண்களோடு பெரிய question mark, ஒரு ஆச்சரிய குறிதான் வரும்….(என்னடா மண்டையா gift வாங்கி இருக்க, இதுக்காடா late ஆக்கின!) என்பதுபோல் கேக்க தோணும். இருந்தாலும் பெண்களுக்கே இருக்கற பொருமையோடு(?!), நல்ல இருக்குன்னு ஒரு வார்த்தை மட்டும் வரும்.
சரி, Saree ஏதாவது எடுத்துட்டு வந்திருந்தா அவ்வளவுதான், “எப்படி எனக்கு பிடிக்காத colour-ஆ பார்த்து வாங்கி இருக்கிங்க”-னு திட்டுதான் விழும். அது எவ்வளவு costly-ஆ இருந்தாலும் same blood தான். “என்னையும் கூட்டிட்டுப் போய் எடுத்திருக்கணும்…” ஒரு ஆலோசனை வேற….இவங்க குடுக்கற expression-ல அடுத்த முறை வாங்கவே மாட்டாங்க நம்ம ம.பி. இப்படி எக்குத்தப்பா ஏதாவது வாங்கறதுக்குள்ள, all ladies, கேட்டுக்கோங்க, முதல்லயே என்ன வேணும்னு அப்பப்ப time கிடைக்கும்போதெல்லாம், போட்டு வைங்க!! அப்பதான், நம்ம வீட்டு புத்திசாலிங்க, கொஞ்சம் யோசிச்சு, உருப்படியா ஏதாவது வாங்குவாங்க!! surprise குடுக்கறேன் பேர்வழி-னு திரும்பவும் எந்த teddy bear-ம் வீட்டுக்கு வராது!
சின்னதா, என் வீட்டு விஷயம் ஒன்னு சொல்றேன், எல்லாரும் கேட்டு ஒரு உச்சு கொட்டுங்க….TV-ல saravana store விளம்பரத்துல வர்ற, sneha போட்டிருக்கற கொலுசு எனக்கு ரொம்ப பிடிச்சுப்போய், நம்ம வாங்கறதுக்குப் பதில், husband-கிட்ட ஆசையா, (வாங்கலேன்னா suspend-தான்!) “ஏங்க sneha போட்டிருக்கற கொலுசு ரொம்ப நல்லா இருக்குல்ல..அது மாதிரி ஒன்னு வாங்கணும்னு”, ஒரு birthday time-ல பிட் போட்டேன்.
நம்ம ஆளு எப்படிப்பட்டவரு! “எனக்கு sneha-வைத் தவிர எதுவுமே தெரியலை, நீ கொலுசை எங்க பார்த்த-னு” கேட்டாரே பார்க்கலாம்…வாயை மூடி அமைதியாகிட்டேன். சரி, இப்ப sneha ஞாபகத்துல மனுஷன் ஏதாவது சொன்னாலும், surprise-ஆ எப்பவாவது வங்கிக் குடுப்பார்னு நானும் எதிர் பார்த்து காத்துக்கிட்டு இருக்கேன்….ஹ்ம்ம்ம்..எங்க sneha கொலுசு போடறதுக்குள்ள, நான் சரோஜா தேவி ஆனாலும் வராது போலிருக்கு…என் பையன்தான் ஆறுதலா, “big boy ஆனதுக்கப்பறம், நான் வாங்கித்தறேன் அம்மா-னு” சொல்லி தேற்றி வச்சிருக்கான்….கதை முடிஞ்சிடுச்சு, எல்லாரும் உச்சு கொட்டுங்க……:-(
க.பி-ல அடுத்த நிகழ்வு, shopping. ம.பி கொஞ்சம் உஷாரான அளுன்னா, shopping-க்கு எப்பவும் கூடப் போக மாட்டாரு. அப்படியே போனலும், தப்பித் தவறியும் credit card எடுத்துட்டு வர மாட்டாரு. Card இருக்குன்னு நிறைய வாங்கிட்டா, அப்பறம் bill யாரு கட்டறதாம். Correct-ஆ எவ்வளவு தேவையோ, அவ்வளவுக்கு cash dealings-தான். Saree shop-க்கு போனதும், பொண்ணு ஏதாவது அழகான சேலையை புடிச்சிக்கிட்டு நிக்கும், (ம.பி-கிட்ட கருத்து கேக்கறதுக்குன்னு தப்பா நினைக்காதீங்க, அது பாட்டுக்கு அழகு பார்த்துகிட்டு நிக்கும்);
நம்ம ஆளு வந்து அப்படியே ஒரு look விட்டு, கண்ணை border-க்கு மேய விடுவாரு. (Border-ல தானே price tag இருக்கும்!!) அது ஒத்து வரலேன்னா, ” அடடா, saree நல்லா இருக்கு ஆன border தான் சரியில்லை”-னு ஒரு comment விழும். ஏற்கனவே confuse party-ஆன பொண்ணும், border சரியில்லாட்டி, டப்புனு saree-யை வச்சிடும். அடுத்த saree-க்கு போகும்…இப்படியே ஒண்னு ஒண்னா பார்த்து கடைசியில, அதுக்கும் பிடிக்காம, நம்ம ஆளுக்கும் பிடிக்காம ஒரு மாதிரியா select பன்னிட்டு வருவாங்க. வீட்டுக்கு வந்ததும்தான் ஏகப்பட்ட confusion வரும். “அந்த orange colour saree எடுத்திருக்கலாம்”. ஒரு காலத்துல english colour-ல select பன்ற புடவை, இப்ப நல்ல அடிக்கற colour-ஆ மாறிடும் பார்த்துக்கோங்க…..ஏதோ அடிச்சு புடிச்சு, ஒரு வழியா shopping முடியும்.
சரிங்க, இப்ப புரிஞ்சிருக்குமே, என்ன difference அப்படின்னு…..இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே போகலாம். எல்லாருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பா, இந்த மாதிரி atleast ஒன்று இரண்டு சம்பவங்களாவது அரங்கேறி இருக்கும். பெரியவங்களா, பார்த்து நிச்சயம் பண்ண கல்யாணத்துலயே இந்த மாதிரி நகைச்சுவை இருக்குன்னா, காதல் திருமணம்? கேக்கவே வேண்டாம்….இன்னும் கலகலதான். இப்படியெல்லாம் இருந்தாதாங்க அது வாழ்க்கை.
இதுனால, நான் என்ன சொல்ல வரேன்னா……கல் எடுக்கறது புரியுது, நான் இப்போ உத்தரவு வாங்கிக்கறேன்….
என்றும் அன்புடன்…..
அண்மைய மறுமொழிகள்