என்னைப் பற்றி
நேசங்களின் வீதிகளில் ஒரு புன்னகைப் பவனி வரும் மனித வாழ்க்கை ஆரோக்கியமானது. எப்போது வேண்டுமானாலும் மறைந்து போகும் ஒரு அதிகாலைப் பனியின் தூய்மை வாழ்வில் இருக்கிறது.
வாழ்வின் நிலையாமை குறித்த பயங்களைத் துரத்தி விட்டு விதிக்கப்பட்ட வாழ்க்கையில் தூய நேசத்துடன் வலம் வருதலே சிறப்பு.
பனித்துளி உலரும் என்பதும், வானவில் கலையும் என்பதும், வாழ்க்கை முடியும் என்பதும் மாற்ற இயலாதவை. இந்த வாழ்வின் நீளத்தை புன்னகையால் அளந்து கொள்வதே வாழ்வின் தத்துவம்.
இதயம் நீட்டுங்கள்,
வாழ்க்கை சோகத்தின் மூட்டைகளைச் சுமக்கும் கழுதையல்ல.
வாழ்க்கை ஆனந்தத்தின் பல்லக்குகளில் பவனி வரட்டும்.
அடுத்த பிறவிச் சிந்தனைகள் அர்த்தமற்றவை
இந்த பிறவியில் வாழாதவற்கு அடுத்தொரு பிறவி எதற்கு ?



Really fantastic the blogs which you have posted.
I’m expecting more @ this from now on..
Keep up the good work !
un kavithaigal vaalvin arthathai unarthuhindrana..Panithuli ularvathai ninaithirungal naam athan azhagai, athan thuimaii enrume ninaika povathu illai..Good thoughts…Inspiring…
அத்தனையும் அழகான கவிதைகள் தொடர்ந்தும் எழுதுங்கள்
கவிதைகளைப் போலவே அதற்காக தேர்வு செய்துள்ள புகைப்படங்களும் மிகவும் வசீகரிக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். எப்பொழுதாவது சமயம் வாய்த்தால் எனது selventhiran.blogspot.com ஒருமுறை வந்துசெல்லுங்கள்.
ஆனந்தம் இறைவரம்
நேசமே நிலைவரம்.. // ம்ம். குத்தூசி துளையில ஒட்டகத்தை நுழைக்கிற மாதிரி எவ்ளோ பெரிய சமாச்சாரம் நறுக்குன்னு அழகா சொல்லியிருக்கீங்க.. அழகு.. !
Ur home looks too guds. ur writings are too poetic, simple & nice to read. keep going.
All the best.
Anbudan,
Shangar.
http://shangaran.wordpress.com
Very Nice Site.
வாவ்வ்வ்வ்வ்.. சூப்பர் ஜானசரா/ஜனசரா/ஜானசாரா/ஜனசாரா.. இத எப்படிங்க உச்சரிக்கிறது? பிழை இருப்பின் மன்னிக்கவும்.. உங்கள் இயற்பெயர் சொல்வீர்களா? இல்லையெனில் எப்படி உச்சரிப்பின் உங்கள் இதயம் விரும்பும் என்று பகருங்களேன்.
நல்ல கவித்துவம், அழகு, நளினம் இழையோடுகிறது உங்கள் வார்த்தைகளில், புகைப்படங்களில்..
மிகவும் ரசித்தேன். அருமையான குறிப்பு.
வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் ஈடேறவும், கனவுகள் பலிக்கவும்.
http://kavithaikealungal.blogspot.com
http://blogsofraghs.wordpress.com
நேரத்தோடு விருப்பனும் இணைந்திருப்பின் என்னுடைய வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். நன்றி.
உங்கள் தளத்தை மேயவேண்டி இருக்கிறது இன்னும்.. இதோ தொடர்கிறேன்.
தோழமையுடன்,
இராக்வன் என்ற சரவணன் மு.
வாவ்வ்வ்வ்வ்.. சூப்பர் ஜானசரா../ஜானசாரா/ஜனசரா/ஜனசாரா.. இத எப்படிங்க உச்சரிக்கிறது? பிழை இருப்பின் மன்னிக்கவும்.. உங்கள் இயற்பெயர் சொல்வீர்களா? இல்லையெனில் எப்படி உச்சரிப்பின் உங்கள் இதயம் விரும்பும் என்று பகருங்களேன்.
நல்ல கவித்துவம், அழகு, நளினம் இழையோடுகிறது உங்கள் வார்த்தைகளில், புகைப்படங்களில்..
மிகவும் ரசித்தேன். அருமையான குறிப்பு.
வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் ஈடேறவும், கனவுகள் பலிக்கவும்.
http://kavithaikealungal.blogspot.com
http://blogsofraghs.wordpress.com
நேரத்தோடு விருப்பனும் இணைந்திருப்பின் என்னுடைய வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். நன்றி.
உங்கள் தளத்தை மேயவேண்டி இருக்கிறது இன்னும்.. இதோ தொடர்கிறேன்.
தோழமையுடன்,
இராக்வன் என்ற சரவணன் மு.
ராகவன் சார், நீங்கள் ஜானகி என்றே அழைக்கலாம். சாரா என்பது, என் கணவர் பெயர் (சரவணன்) சுருக்கம்.
//ராகவன் சார், நீங்கள் ஜானகி என்றே அழைக்கலாம். சாரா என்பது, என் கணவர் பெயர் (சரவணன்) சுருக்கம்.//
நன்றி ஜானகி. என்ன நீங்க ‘சார்,மோர்’ எல்லாம் கூப்பிடறீங்க..
நீங்க ரொம்ப சின்னப் பொண்ணாத் தெரியரீங்க இந்தப் புகைப்படங்களில். ஒரு வேளை, பழைய புகைப்படங்களோ?
நீங்கள், ராகவன் என்றே அழைக்கலாம் தோழி. சரிதானே.
ஒரு தட்டச்சுப்பிழை நேர்ந்து விட்டது.
‘நேரத்தோடு விருப்பமும்’ என்பது ‘விருப்பனும்’ என்று என் முந்தைய பின்னூட்டத்தில். வருந்துகிறேன்.
நேற்று ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நான் பலமுறை இட வேண்டியதாயிற்று.
அதனால் தான் இங்கேயும் இரண்டுமுறை அது இடம்பெற்றிருக்கிறது.
நன்றி.
janu – migha arumai.. tamil molzhi valga..eppadi tamil font download seivathu…
ஆனந்தம் இறைவரம்
நேசமே நிலைவரம்.
அற்புத வரிகள்…. வாழ்துக்கள் !
hi-thanks
வணக்கம் உங்கள் கவிதை பிரசவிப்புக்கள் எல்லாம் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கின்றது பாரட்டுக்கள் ஆனால் உங்களை பாரட்ட கூடிய அளவு தகுதி எனக்கு இருக்கின்றதா என்பது தெரியவில்லை