காதல் கொண்டேன்….

 kadal-konden14

காதல் கொண்டேன்
நான் காதல் கொண்டேன்,
கனவுகள் தறித்து,
உன் நினைவுகள் சுமந்து,
காதல் கொண்டேன்
நான் உன்னிடம் கைதுதான் ஆனேன்.

ஒற்றை பனித்துளியால் நனையும்
ஒரு கோடி இலைகள்போல்
உன் கற்றை பார்வையால்
நான் கரைந்தேதான் போனேன்..
இப்போது காதல் கொண்டேன்
நான் புது இதயம் செய்தேன்.

மழையறியாத மீன்களாய்,
உன் நிழல் தெரியாது வாழ்ந்திருந்தேன்,
இன்று உன் மனம் அறிந்தேன்
என் கடல் கடந்தேன்.
காதல் கொண்டேன்
நான் புது உயிராய் ஆனேன்.

கேள்விகளுக்கடங்கா என் கர்வம் உடைத்து,
என் இயல்புகள் தொலைய வைத்த,
கேள்வியின் நாயகி உன் மேல்,
காதல் கொண்டேன்
நான் காற்றாய் மிதந்தேன்.

தேவதை வரம்தருவாள்,
ஒரு நாள் உன் கரம்பிடிப்பாள் என,
அம்மா சொன்னது புரிந்தது,
அம்மாவும் தேவதைதான்,
உன் வரவு தெரிந்திருக்கும்போல்
வியப்புகள் விண்ணைமுட்டுமுன்,
என் விழிகள் நிரப்பிய உன் மேல்,
நான் காதல் கொண்டேன்,
இப்போது கடவுள் ஆனேன்.

இப்படி நான் காதலில் விழுவேன் என,
சற்றுமுன் வரை நினைத்ததில்லை,
இந்த நிமிடம் புரட்டிப்போட்டதே,
இது தேவலோகமோ என்ன விந்தையோ,
கோடி வருடங்கள் தாங்கிய ஒரு நொடி
இந்த நொடி, உன்னோடு
கோடி முறை வாழ்ந்ததாய் தோணுதே
நிச்சயமாய் நான் காதல் கொண்டேன்
மானுடத்தின் யுகங்கள் கடந்தேன்.

 

 

~ by janasara மேல் நவம்பர் 6, 2008.

2 பதில்கள் to “காதல் கொண்டேன்….”

  1. வாவ்,.. அருமை. அருமை. வார்த்தைகளும் உணர்வுகளும் செம்புலப் பெயல் நீராய் கலக்கின்றன. அழகு.

  2. தேவதை வரம்தருவாள்,
    ஒரு நாள் உன் கரம்பிடிப்பாள் என,
    அம்மா சொன்னது புரிந்தது,
    அம்மாவும் தேவதைதான்,

    nice lines….

மறுமொழி இடுக