விளக்கு
விளக்கேற்றி பூஜைசெய்து
கடவுள் துதி பாடி
இறை தேடிய காலமெங்கே
என நான் வியப்பதுண்டு!
புரிந்திருக்குமே,
இப்போதெல்லாம் நான்
அப்படி செய்வதில்லையென…
காரணம் எதுவாயிருக்குமென
நான் யோசிப்பதுண்டு.
வாழ்க்கையின் ஓட்டமாக இருப்பின்
காலத்தின் மேல் பழியேற்றுவதாகும்!
துன்பமில்லாத வாழ்வியலாய் இருப்பின்
சுயநலமான சிந்தனையாகும்!
தன்னிறைவு காரணமாகின்,
ஆணவத்தின் உச்சமாகும்!
தேவையின்மை தோல் உயர்த்தினால்,
கடவுளும் தேவைக்குதான் என்றாகும்!!
தெரியவில்லை,
காரணம் எதுவாயிருப்பினும்,
புரிதல் ஒன்றுமட்டுமே,
கடவுள் சிந்தனையோ
வழிபாட்டு கோட்பாடுகளோ,
உள்ளத்தில் கள்ளமில்லாதவரை,
உயர்ந்தது நற்சிந்தனைகளே….
அம்மாவின் மன நிறைவுக்கு
அவ்வப்போது ஒளிர்விடும்
என் விளக்கின்
அமைதியான அந்த
புன்னகை மொழிவதும்,
மனதின் இருளகற்றி
நற்சிந்தனை ஒளியேற்றுவதே!


மறுமொழி இடுக