எங்கிருந்தாய்?
இத்தனை நாளாய் எங்கே போயிருந்தாய்…
கேள்விகள் ஆயிரம்!!
கவிதை எழுத நேரமில்லையென
பொய்யுரைப்பேனோ,
அல்லது
நானாக நானில்லை என்று
மெய்யுரைப்பேனோ?
எதுவென்று தெரியவில்லை…
காலத்தின் மீது பழிசுமற்றத்தான் போகிறேன்….
காட்டாற்று வெள்ளமாய்,
வாழ்க்கை அடித்துச் சென்ற வேகத்தில்,
சிறு படகாய்
நான் இப்போதுதான்
கரை ஒதுங்கியுள்ளேன்.
இதுவரை எவ்வளவு தூரப் பயணம்
எனத் தெரியவில்லை,
இன்னும் பாதை நீள்கிறது….
கவிதை எழுதும் முயற்சி மட்டும்
இருந்திருக்கவில்லை எனில்,
கவலையாய் போயிருக்கும்,
கடந்த கால் நினைவுகளின் பதுவுகள்
சுவடுகளின்றி மறைந்திருக்கக் கூடும்.
நினைவுகள் சுமந்து
கற்பனைகள் விரிந்து
மீண்டும் இந்தப் பயணம் ஆரம்பம்…
நேசத்தின் சுவாசம் முகர்ந்து,
வாழ்க்கையின் நீட்சி உணர்ந்து,
எல்லையில்லா பயணமாய்
தொடர்ந்து செல்வேன்…


வருக தோழி, வருக… மீண்டு(ம்) வந்தமைக்கு நன்றிகள். !