கேள்விகள்
கேள்விகள் ஒளிந்திருக்கும்
ஒவ்வொரு தருணமும்
கடினமானவைதான்!!
காலத்தின் கைகளில்
ஒப்படைக்கும்
கேள்விகள்,
விடையறியாதவை…
விடைகள் காத்திருக்கும்
கேள்விகளோ,
கேட்கப்படாமலேயே
காலத்தைக்
கடந்துவிடுபவை….
புருவங்கள் உயர்த்தி
விழிகள் உதிர்க்கும்
கேள்விகள்,
மனதினை தைப்பவை….
உள்ளத்தில் கள்ளமின்றி
மழலைகள் தெறிக்கும்
கேள்விகளோ,
விடையறிந்தும்
விளக்க இயலாதவை…
எண்ணற்ற கேள்விகள்,
ஒவ்வோர் மனதிலும்….
நியாயமானவை,
ஆதாரமற்றவை,
இயல்பானவை,
தேவையற்றவை,
சிந்திக்க வைப்பவை…
மொத்தத்தில்,
விசனப்படவே வைக்கின்றன
அத்தனை கேள்விகளும்!!

மறுமொழி இடுக