மழை

rain1.jpg

நான் வெளியே வந்ததும்,
வேகமாய்
எட்டிப் பார்த்தது
ஒரு குட்டித் துளி,
வசமாக மாட்டிக்கொண்டாய்,
இசையாக நனைத்துவிடுகிறேன் என்று,
சத்தமாக மொத்தமாய்
கொட்டித் தீர்த்துவிடத்
துடித்ததோ என்னவோ,
தாயைப் பார்த்த
கன்றினைப் போல்
துள்ளித் திரிந்துதான்
என் மேல் படர்ந்தது…..

சிலுசிலுவென்று இதமாய்
மனதினில் நுழைந்து,
ஆளரவமற்ற மலைகளின்
ஓரமாய் ஓடும்
நதியின் அலைகளை,
மெலியதாய் அசைத்து,
தேகம் குளிராமல்
வருடிச்செல்லும் காற்றும்,
இசைவாய்ப் பறந்தபோது,
சில்லறையாய் நனைந்த நான்
மொத்தமாய் நனையத் தொடங்கினேன்….

வழிமறித்து மனதை
கொள்ளை கொள்ளும்
மழையை எதுர்த்து
எதுவும் செய்யத் தோன்றாமல்,
முதல் துளி தொடங்கி
சீற்றம் வற்றிய
கடைசித் துளி வரை
ஆனந்தமாய் மூழ்கியபோது
கண்டுகொண்டேன்
மழை எப்போதும் இன்பம்,
உடல் நனைத்தல் மட்டுமல்ல,
மனம் நிறைத்தல் கூட,
இப்போது புரிந்தது,
ஏன் மழைக் கள்ளன் என்பதுவும்……
 

~ by janasara மேல் செப்டம்பர் 28, 2007.

9 பதில்கள் to “மழை”

  1. மழையில் நனைந்தேன்… குடைகளையும், கூரைத் தடைகளையும் மீறி எனில் இறங்கி மனம் நனைத்த மழையில் நனைந்தேன். நன்றி தோழி..

  2. mAlai kAllan.. maZhai kAllan.. aarumai. raasithu ezhuthi irrukeenga… vazhthukkal.

  3. நல்ல கற்பனை சாரா..

    முத்தாய்ப்பும் அருமை.. நானும் இதே போன்று ஒரு மழைக்கவிதை எழுதியிருக்கிறேன் சில மாதங்களுக்கு முன்பு.

  4. //வசமாக மாட்டிக்கொண்டாய்,
    இசையாக நனைத்துவிடுகிறேன் என்று,
    //

    அடடா.. இசையாய் நனைத்தல்.. அருமைங்க..

  5. //வசமாக மாட்டிக்கொண்டாய்,
    இசையாக நனைத்துவிடுகிறேன் என்று,
    //

    ஆஹா.. இசையாய் நனைத்தல்.. அருமை!

  6. //சத்தமாக மொத்தமாய்
    கொட்டித் தீர்த்துவிடத்
    துடித்ததோ என்னவோ,
    //

    இந்த ‘சத்தம், மொத்தம்’ கவிதையின் ஆரம்பவரிகளுக்கு எதிர்ப்பதமாய் இருக்கிறதோ..

    துளியென ஆரம்பித்திருக்கிறீர்கள்..
    மெதுவாய் தேகம் குளிராமல் என்றும் வர்ணித்திருக்கிறீர்கள்..

    ஏதோ தோன்றியது கேட்டேன்…

  7. //வழிமறித்து மனதை
    கொள்ளை கொள்ளும்
    மழையை எதுர்த்து
    எதுவும் செய்யத் தோன்றாமல்,
    //

    மனதை’க்’ கொள்ளை – என்றிருக்க வேண்டும் சாரா….

    எதுர்த்து – எதிர்த்து – என்றிருத்தல் நலம் என்று நினைக்கிறேன்.

  8. ராகவன் சார், எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும். உங்களுடைய கருத்துகளுக்கு, மிக்க நன்றி.

  9. வணக்கம் நல்ல கவிதை

மறுமொழி இடுக