தொடக்கத்தின் முடிவு….

thodakkam.jpg

சரி எது தவறு எது
விளங்காமலேயே
நகர்ந்துவிடும் நாட்களில்,
சரியாகவே நிகழ்ந்துவிடுகின்றன
அத்தனை தவறுகளும்!!!
தவறுகள் திருத்தப்படுமுன்,
திருத்தப்பட இயலாமலேயே போய்விடுமோ…
அச்சமும் பரிதவிப்புமே
விழிகளில் எப்போதும்
தேங்கி இருக்கிறது….

அத்தனையும் விடுத்து
புத்தம்புதிதாய்
சிறகடித்துப் பறக்க ஆசைப்படும்,
ஒவ்வொரு விடியலின் தொடக்கமும்,
உன் நினைவுகளின் வாசனை தெளித்து,
மு(ம)டிந்தே பிறக்கிறது….
துவங்காத தொடக்கத்தின்
இறுதி ஊர்வலம் மட்டுமே
நான் காணும்
ஒவ்வொரு நிகழ்காலமும்……
புரிந்துகொள்ள விரும்பும்
அத்தனை சறுக்கல்களும்
புரியாமலேயே இருந்துவிடாதா,
நிச்சயமாக தவிக்கும்
பச்சை மனது……

~ by janasara மேல் ஆகஸ்ட் 31, 2007.

ஒரு பதில் to “தொடக்கத்தின் முடிவு….”

  1. தோழி, கவிதையின் வரிகள் மனதை இறுக்கமாய் பற்றிக் கொள்கின்றன. அனுபவங்களின் வெளிச்சம் தோண்டும் இருட்டுக் குழிகளுக்குள் துழாவித் திரியும் மனநிலையில், கவிதையின் இருண்மை புலனாகிறது.

    வாழ்க.. வளமுடன்

மறுமொழி இடுக