இருட்டின் காதலி….

dark.jpg

இருட்டின் மீதிருக்கும் மோகம்
இன்றளவும் குறைந்ததேயில்லை எனக்கு…
மெல்லிய சோகம்
என்னைக் கட்டியனைக்கும்போது,
ஆழ்மனதின் பேரிரைச்சல்
ஆடும் ஆனந்தக்கூத்துகளை,
அடக்கியாளும் திறமை,
மொளனமான இருட்டுக்கு
மட்டுமே சாத்தியம் என்பதாலேயோ,

சட்டென்று சன்னமாய்
மனதை கொள்ளைகொண்டுபோகும்
சிறு தீபச்சுடரின்
வெளிச்சத்தை பரிணமிக்கும்
அசாத்திய பின்னூட்டம்
வெளிச்சமில்லா இருட்டுக்கு
மட்டுமே சொந்தம் என்பதாலேயோ,

சத்தமில்லாமல் மொத்தமாக
காற்றோடு களவாடப்பட்டு,
நிகழ்கால சறுக்கல்களை
நிஜமாக மறந்து
உயிரோடு நிழலாக
பயணம் செய்யும் என்
இரவுகளின் விடியல் இருட்டு என்பதாலேயோ,
இந்த உலகத்தின் வெளிச்சத்தை
முதன்முதலாய் உணருமுன்,
என் முதற்பார்வை பதிந்த
அம்மாவின் கருவறை
இருட்டு என்பதாலேயோ,

ஒவ்வொரு விடியலையும்
நம்பிக்கை விதை தூவி
புதிதாகப் பூக்கச் செய்யும்
எல்லா இரவுகளின்
மொழிபெயர்ப்பும் இருட்டு என்பதாலேயோ,
என்னவோ,
இருட்டின் மீதிருக்கும்
என் காதல் தணிவதேயில்லை….

~ by janasara மேல் ஜூலை 30, 2007.

4 பதில்கள் to “இருட்டின் காதலி….”

  1. பிரமாதத்தின் உச்சகட்டம் ! ஆஹா !!!

  2. Hi, enna ivlo naal enga poi irnutheengaa….
    kavithai roomaba super.
    late vandhaalum latest-a irrukku.
    Vaazthukkal..

    anbudan,
    shangaran.

  3. மிக்க நன்றி சங்கர்….சின்ன இடைவெளி ஆகிடுச்சு….

  4. அழகான கவிதைக்களம். நல்ல வார்த்தைகள். நன்றாக இருக்கிறது. இருந்தாலும், படித்து முடித்தவுடன், ஒரு கணம் ஒரு தாங்கமுடியாத சுமை அழுத்துமே, அது மிஸ்ஸிங். தப்பா எடுத்துக்காதீங்க. முடிந்தால், சற்றேமாற்றி எழுதிப்பாருங்களேன்.

    நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்தான். கொஞ்சம் ரசனை உண்டு. அவ்வளவே..நான் சொல்வதை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய தேவையும் இல்லை. இந்த கவிதைக்கான அனுபவம் என்னிடம் இல்லாமலும் இருக்கலாம்

    வாழ்த்துக்கள்.

மறுமொழி இடுக