பேசாத வார்த்தைகள்

பேசிப் பேசி இறந்துபோன
நொடிகள் சொல்கிறது
உருப்படியாக எதுவுமே
பேசவில்லை என்று…

பேசிய வார்த்தைகள்
நிமிடங்கள் கரைந்ததற்காய்
வருத்தப்பட,
பேசாத வார்த்தைகள்
நொடிகளுக்காய்
காத்திருக்கிறது!!
வார்த்தைகள்
வரிந்துகட்டிக்கொண்டு
அலைகையில்,
இறப்பதற்காகவே
தவமிருக்கிறது
நாம் பேசுவதற்காய்
காத்திருக்கும் நொடிகள்.

எப்படி சொல்ல?
மீண்டும் சந்திப்போமா என்று
நீ அருகில் இருந்தும்
அடுத்த சந்தர்ப்பத்திற்காகவே
சில வார்த்தைகள்
தயங்கி நிற்பதை..

~ by janasara மேல் ஜூன் 8, 2007.

4 பதில்கள் to “பேசாத வார்த்தைகள்”

  1. அருமையான கவிதை. உணர்வுகளின் ஊர்வலம், உயிரோட்டமான தேர்வலமாய் நகர்கிறது கவிதையில்.

    //
    அடுத்த சந்தர்ப்பத்திற்காகவே
    சில வார்த்தைகள்
    தயங்கி நிற்பதை..

    //

    ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வரிகளை உணராதவர் இருக்க முடியாது என்பது எனது கணிப்பு.

    வாழ்த்துக்கள் தோழி.

  2. //அடுத்த சந்தர்ப்பத்திற்காகவே
    சில வார்த்தைகள்
    தயங்கி நிற்பதை..//

    சேவியர் சொன்னது உண்மைதான். நான் கூட சில சமயங்களில் அடுத்த சந்தர்ப்பத்திற்காக வார்த்தைகளையும், சம்பவங்களையும் சேமித்து வைத்திருக்கிறேன்.

  3. Really Good, Sister!

  4. edwhfa ,Uf;frpwaJ

மறுமொழி இடுக