சிந்தனை…

sinthanai.jpg

எப்பொழுதோ நன்றாக வாழப்போகும்
நிச்சயமற்ற வாழ்க்கைக்காய்,
இப்போது வாழ்ந்த்து கொண்டிருக்கும்
உண்மையான நொடிகளை
அலட்சியப்படுத்த
எனக்கு விருப்பமில்லை…..

விட்டில் பூச்சியாய் விளக்கைத்தேடி
வாழ்க்கையை மாய்த்துகொள்ளும்
நிலையும் இல்லை,
பட்டாம்பூச்சியாய் இஷ்டமென
சுற்றித்திரியும் சூழ்நிலையும் இல்லை…
ஒரு நாள் வாழ்வே இருந்தும்,
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களைப்போல்,
மத்தாப்பு புன்னகையுடன்,
எப்போதும் வலம் வரவே விரும்புகிரேன்….

இன்றைய நொடிகளை,
நாளைய தேவைகளுக்காய்,
எப்போதும் செலவிட்டுக்கொண்டிருப்பது,
காற்றை வீணாய்
நத்தைக் கூட்டுக்குள்
அடைத்து வைக்கும்
முயற்சியே ஆகும்…

என் தேவைகள்,
இக்கணத்தில் வாழ்வின் இலக்கனம்..
புதிய கவிதையாய்
தோன்றும் நாளைக்கு,
மரபுகள் விதிமீறல்கள்…

இன்று என்பது
நேற்றைய நம்பிக்கையின் மிச்சங்கள்,
நாளை என்பது,
இன்றைய வாழ்வின் அர்த்தங்கள்….

~ by janasara மேல் மே 19, 2007.

3 பதில்கள் to “சிந்தனை…”

  1. kalakko kalakkunnu Kalakkareenga thozhi. enna arumayaana varihal.. enna asathalaana kavithai…

    இன்று என்பது
    நேற்றைய நம்பிக்கையின் மிச்சங்கள்,
    நாளை என்பது,
    இன்றைய வாழ்வின் அர்த்தங்கள்….

    kalakkal !!! vaazthukkaL

  2. Mikka nantri puthiyavan sir….

  3. ம்ம்…
    வாசிக்க பட வேண்டிய கவிதை.

    நேச‌முடன்,
    ச‌ங்க‌ர‌ன்.

மறுமொழி இடுக