நானும் கடவுளும்

god.jpg

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது,
தேவைகளின் தீண்டல்களில்
சூழ்நிலைக் கைதியாய்
சிறை நிரப்பியபோது,
உன்னை நினைக்காத நொடிகளில்லை….

என் தேவைகளின்
சேவை முடிந்தபின்,
இன்பமான பொழுதுகளில்
உன்னை நினைக்கக்கூட நொடிகளில்லை…

இப்போது புரிகிறது,
உன் தேடல்களுக்காகவே,
என் தேவைகளை எப்போதும்,
ஒரு கோப்பை தண்ணீராக
நிரம்பவே வைத்திருக்கிறாய்!!

~ by janasara மேல் மே 17, 2007.

3 பதில்கள் to “நானும் கடவுளும்”

  1. Nice poem… Last few lines are little confusing to understand.

  2. ரொம்ப யதார்த்தமா இருக்கு.

    Anbudan,
    shangar.
    http://shangaran.wordpress.com

  3. ”ippadiyellam unmaiya velila sollakkoodaathu”

    realy fantastic

மறுமொழி இடுக