கோபக் கடல்

angry.jpg

கட்டுப்படுத்தவே நினைக்கிறாய்.
காட்சிப் பிழையாய்
நான் தோன்றினாலும்,
கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிக்கிறாய்
நான் செய்த தவறென்ன
என்று சிந்திக்கவிடாமல்
கனப்பொழுதினும்
சீண்டிப் பார்க்கிறாய்.

உன் இயல்பு இதுவென்று
ஒதுங்கிவிட்டாலும்,
சடசடவென பூமிபாய்ந்து
விழும் மழையாய்
என் மீது பாய்ந்து
வசையால் நனைத்துவிடுகிறாய்
.
எப்பொழுதும் நீயேதான்
ஆரம்பிக்கிறாய்,
உன் நெருப்பெனும் வார்த்தைகள்
என் வாழ்வின்
விளக்கினில் ஒளியேற்றாமல்,
மனக் கூரையின் சுவடுகளை,
தீப்பற்றிதான் எரிக்கிறது.

எப்போதாவது திருந்திவிடுவாயா
என்று ஒவ்வொரு நாளும்
ஏங்குவதற்குப் பதிலாய்,
இப்போதே தீக்குளித்துவிடுகிறேன்,
என் சாம்பலையாவது
உன் வீட்டினில் வைக்காமல்,
கங்கை இல்லாவிடினும்
தேங்கி நிற்கும்
சிறு குட்டையிலாவது கரைத்துவிடு.

~ by janasara மேல் மே 16, 2007.

6 பதில்கள் to “கோபக் கடல்”

  1. You are updating this site daily ?? its good !! Very nice poem. I liked each and every line in this poem !!!

  2. புதியவன் சர், உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி…..வாரம் இருமுறையாவது கிருக்கல்களை போடலாம் என்று நினைத்துள்ளேன்….கண்டிப்பாக போட்டுவிடுவேன்!!

    உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி……

  3. சாம்பலைக் கரைக்காவிடின், மீண்டும் எரித்துவிடுவாயோ?

  4. nice

  5. gud poem. keep writing lik this.

    Anbudan,
    Shangar.
    http://shangaran.wordpress.com/

  6. வழக்கமான வார்த்தைகளில் வலி சொல்லியிருக்கிறீர்கள் , முடிந்தால் கோபத்தின் கடலலையை எவர் மீதும் சுனாமியா வீசாமல் இருங்கள் . வாழ்த்துக்கள்!

    Ken

மறுமொழி இடுக