மௌனம்
நான் பலமுறை சிந்தித்துள்ளேன்…
உன் மொளனத்தின் மொழிபெயர்ப்பில்,
நீ எனக்களித்த பதில்கள்,
உன் பக்குவமான உணர்வுகளின்
மெல்லிய அரங்கேற்றமாகவே
இருந்திருக்கிறது.
என் காதலின்
கண்ணியமற்ற விண்ணப்பங்களில்
உன் மௌனம்,
வெட்கத்தையே அளித்திருக்கிறது.
என் ஆசைகளின்
அத்தனை சுழிகளுக்கு
நடுவினிலும்
உன் மௌனம்,
அழகான ஒரு புள்ளியாய்
சம்மதத்தையே அளித்திருக்கிறது.
என் இனிமையான பொழுதுகளில்
உன்னிடம் சீண்டுகையில்,
உன் மௌனத்தின் தீண்டல்களில்
இதயம் களவாடித்தான் போயிருக்கிறது
எப்பொழுதும்
சண்டைகளை நானே
துவக்கும்பொழுதும்,
உன் மௌனம்
பேசிய வார்தைகள்,
என்னை அமைதிப்படுத்தவே
முயன்றிருக்கிறது
தவறு செய்துவிட்டு
என் கண்களில் தேங்கி இருக்கும்
மன்னிப்புகளுக்கு,
உன் மௌனம்,
தண்டனையாகவே
இருந்திருக்கிறது
மௌனமாகவே இருந்துவிடு,
உன் மீதிருக்கும்
காதலுக்கும்,
என் மீதிருக்கும்
ஏற்றத்தாழ்வுகளுக்கும்
அதுவே உயர்ந்த மொழி….


Good one.
Excellent one. Very nice.
மௌனமாகவே இருந்துவிடு,
உன் மீதிருக்கும்
காதலுக்கும்,
என் மீதிருக்கும்
ஏற்றத்தாழ்வுகளுக்கும்
அதுவே உயர்ந்த மொழி….
mikavum arumai
mmm.
orea feelings-a irrukku. nice.
Anbudan,
Shangar
http://shangaran.wordpress.com