உன்னோடு தினம் தோறும்..
விரலோடு விரல்சேர விதியொண்ணு வேணும் – உன்
இதழோடு இதழ்சேர பொழுதொண்ணு வேணும்
மனசோடு மனம்சேர விழிப்பார்வை வேணும் – உன்
மெய்யோடு மெய்சேர எப்போதும் தோணும்
பார்வைக்குள் எப்போதும் உன்னோட வதனம் – ராப்
போர்வைக்குள் எப்போதும் குறும்போட வரணும்
வேர்வைக்குள் விளங்காத மோகத்தை தரணும் – இது
நாள்தோறும் இருந்தாலோ எனக்கேது மரணம்
மாமாநீ பொட்டு வெச்ச நெத்தியில வாசம் – அது
ராமான்னு இருந்தவளை தொட்டுவிட்டு வீசும்
சாகா வரமொன்னு வேணுமான்னு கேட்டா – அன்பு
சாகா வரம் மட்டும் போதுமின்னு கேப்பேன்


Really fantastic poem – Keep up the good work.. !
The line which is impressing and touching is
“saaga varamonnu venummaanu ketta – anbu saaga varam mattum pothumunnu keppan “
Thanks Karthik. Thanks for your encouragement !
anbu saaga varam than niramtharam….Great lyrics and Great meaning…
மாமாநீ பொட்டு வெச்ச நெத்தியில வாசம் – அது
ராமான்னு இருந்தவளை தொட்டுவிட்டு வீசும் – கலக்கறீங்க போங்க …