உயிர்த்தெழும் சிலந்தி
கிளம்புவதற்கு சற்று நேரம் வரை
இது எத்தனையாவது முறை
என மனதில் எண்ணிக் கொண்டேன்;
விழாக்கோலம் பூணும்
கனாக் காலமய்,
விரைவாய் ஓடிய
இருபத்தைந்தாவது முறை என
சிரித்துக்கொண்டேன்….
நல்ல சகுணமாய்,
பலவற்றில் விழித்து,
புதியதொரு வாழ்வைத் தேடி,
பூமியைத் தேடி வீழ்ந்த,
மழையாய்ப் புறப்பட்டேன்
எனக்கென இறைவன்
மெனக்கெட்ட பிரயத்தனமோ,
சாதனையோ சோதனையோ,
இந்த வேலையும் கிடைக்கவில்லை….
பூமி குடித்து துப்பிவிட்ட
எச்சிலாய் தேங்கி நிற்கும்,
குட்டையைப்
தோல்வியின் விளிம்பில்,
துவண்டு போய் நிற்கிறேன்…
முயன்றதை முயற்சித்தும்
பயனில்லையே இறைவா
நீயே இங்கு நானாக இருந்தால்,
என்ன செய்வாய்….
துயரமே வென்றது என்னில்!!
கை கூப்பிக் கெஞ்சுகிறேன்
என் தோள்களின் பாரம்
தன் மீது எற்றுக்கொள்வாயா,
என மேல் நோக்கி விழிக்கிறேன்!!
சுவற்றின் மேல்
பின்னியிருக்கும் வலையை,
இம்மியும் விடாமல்
நேற்று துடைத்திருக்கையில்
மீண்டும் வலைகளின் பின்னல்களில்,
மும்முரமாய் இறங்கியிருக்கையில்
சிலந்தியை கண்ணுற்றேன்!
பல இடங்களிலும் அதை
துரத்தியுள்ளேன்!
கைகளில் கிடைக்கும்,
பொருள் கொண்டும்,
வலையை கிழித்துள்ளேன்,
யாரிதைச் செய்தார்கள் என்று,
தெரிந்தோ, தெரியாமலோ,
தன் வேலையை செவ்வனே செய்யும்
சிலந்தியை கவனித்தேன்!
தன் வாழ்வின் பொருள் உணர்ந்து
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும் சிலந்தி
என்னைவிட உயர்வாய் தெரிந்தது!
வலை பின்னுதல் – சிலந்தியின் கடமை!
வலை கிழிதல் – வாழ்வின் இயல்பு!
முயற்சித்தல் – என் கடமை!
தோல்வியடைதல் – வாழ்வின் இயல்பு!
எதிலும் இருக்க வேண்டும்
இன்னொரு முயற்சியின் வித்து
முயற்சிகளின் மூட்டையில்
கட்டப்பட்ட வெற்றியின் அஸ்திவாரமே,
என்றைக்கும் உறுதியானது!
புயலென பாய்ந்து வந்த என்மனம்,
சருகாகிறது இப்போது,
மேகத்தைக் கிழித்து
வெளிவந்து ஒளிர்விடும் நிலவாய்,
என் துயரங்களின் வடிகட்டியில்,
தூயவனாக துயரின்றி
வெளிவருகிறேன்!
இப்பொதும் மனம் புயலென
மாறுகிறது
அடுத்த முயற்சிக்கு
ஆயத்தமான புயல்

நன்றாக உள்ளது..தொடரவும்..
Valai pinndudal – sialnthin kadamai…Valai kizhithal…vaazhvin ialbu…Great thoughts…Un kavithai is very ethartham …..karpanaigalai vida ethartham reaches the hearts of readers very fast…Great…Waiting for next Kavaithai….
Valai pinndudal – sialnthin kadamai…Valai kizhithal…vaazhvin ialbu…Great thoughts…Un kavithai is very ethartham …..karpanaigalai vida ethartham reaches the hearts of readers very fast…Great…Waiting for next Kavaithai….
Excellent, keep it up.
Good thoughts, keepit up
எதிலும் இருக்க வேண்டும்
இன்னொரு முயற்சியின் வித்து
முயற்சிகளின் மூட்டையில்
கட்டப்பட்ட வெற்றியின் அஸ்திவாரமே,
என்றைக்கும் உறுதியானது!
ரெம்ப நல்லா இருதுச்சு. பழைய கதையை அதற்கான எளிமையோடும் புதிய வீரியத்தோடும் தந்தது நல்லாயிருந்துச்சு. வாழ்த்துக்கள்
Superb..
சிலந்தி வலைபின்னிய கதை எத்தனைமுறை கேட்டிருப்போம் அதையே இனிக்கும் வார்த்தைகளில் உரக்கச் சொல்லியிருக்கிறார் கவிஞர். சிலந்தியைப் போலவே இன்னுமொருமுறை படிக்கலாம்.
“எதிலும் இருக்க வேண்டும்
இன்னொரு முயற்சியின் வித்து
முயற்சிகளின் மூட்டையில்
கட்டப்பட்ட வெற்றியின் அஸ்திவாரமே,
என்றைக்கும் உறுதியானது!”
http://www.cyrilalex.com/2007/05/blog-post_21.html
- Cyril Alex